Yagnopaveetha Dharana Mantra Tamil - Description
Dear readers, here we are offering Yagnopaveetha Dharana Mantra PDF in Tamil to all of you. Yagnopaveetha Dharana is one of the most pious and important rituals in Sanatan Dharma. Yagnopaveetha plays a very vital and significant role in the life of a Brahmin.
As per the various Vedic scripture, Yagnopaveetha protects the one who wears it and follows its rules and regulations. One should follow the proper guidance and regulations of wearing Yagnopaveetha because it’s a very powerful and impactful thing that can awaken you.
Yagnopaveetha Dharana Mantra PDF in Tamil
இன்று பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்
பூணூல் என்பது இந்து மதத்தில் கூறப்படும் அனைத்து சாத்திர மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படி கடைபிடிக்கும் எக்குலத்தினரின் ஆண்களும் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆன்மீக சக்தி மிகுந்த நூலாகும். இதை அணிவதற்கு/ மாற்றுவதற்கு சிறந்த தினம் ஆவணி அவிட்டம் தினமாகும். இந்த தினத்தில் காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.
ஆசமனம்: ஒம் அச்யுதாய நம: ஒம் அனந்தாய நம: ஒம் கோவிந்தாய நம:
விக்னேச்வர த்யானம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே
ப்ராணாயாமம்;
ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும்.
ஸங்கல்பம் மந்திரம்,
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த, விஹிதஸதாசார, நித்யகர்மானுஷ்டான, யோக்யதாஸித்தயர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம், யஜ்ஞோபவீத்தாரணம் கரிஷ்யே.
என்று ஜலத்தை தொட்டு
யஜ்ஞோபவீத்தாரண மஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: என்று தலையில் தொட்டு
த்ருஷ்டுப் சந்த: என்று மூக்கு நுனியில் தொட்டு
பரமாத்மா தேவதா:என்று மார்பில் தொட்டு
யஜ்ஞோபவீத்தாரண விநியோக
என்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை ஜலமிருக்கும் பஞ்ச பாத்திரத்தில் வைத்துக் கொண்டு
யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்
என்று கூறி புதிய பூணுலைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல் எண்ணிக்கையில் அணிந்து கொள்ள வேண்டும். சில குலத்தினருக்கு மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது.
ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம்
என்று ஜெபித்து பழைய பூணுலைக் கழற்றி வடதிசையிலோ அல்லது ஜலத்திலோ போட வேண்டும். இதன் பிறகு மீண்டும் ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் இடுப்புக்கயிறு, தண்டம்-மந்திரம் சொல்லி அணிய வேண்டும்.
You can download Yagnopaveetha Dharana Mantra PDF in Tamil by clicking on the following download button.