நற்கருணை ஆராதனை வழிபாடு PDF in Tamil

நற்கருணை ஆராதனை வழிபாடு Tamil PDF Download

நற்கருணை ஆராதனை வழிபாடு in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of நற்கருணை ஆராதனை வழிபாடு in Tamil for free using the download button.

நற்கருணை ஆராதனை வழிபாடு Tamil PDF Summary

Hello Guys, here we have come up with நற்கருணை ஆராதனை வழிபாடு PDF in Telugu language to help those users who are looking for the Good Friday prayer. This is a famous prayer of Jesus Christ in which we pray to Jesus for our bright and healthy future. In this article, you can also download the Good Friday Prayer PDF in English language by using the link given below.
இதோ, நம் கண் முன்னே இறைவன் நம்மை மீட்ட இறைவன் இங்கு இருக்கின்றார். பெத்லகேம் மாட்டுத் தொழுவத்திலே பிறந்த குழந்தை; கலிலேயா கடலோரத்திலே சீடர்களோடு உரையாடி நன்மை பல புரிந்து வந்த இறைவனின் திருமகன் ; காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிட்ட வல்லவர்; சீமோனின் வீட்டிலே லேவியின் இல்லத்திலே சக்கேயுவின் மாளிகையிலே விருந்துண்ட போதகர்; பாலை நிலத்தில் 5000 பேருக்கு புதுமையாக உணவளித்தவர் : (மத். 14 : 20) மதலேனாவை மன்னித்த அதே மாபரன் (லூக். 7 : 48). இதோ, இங்கே அப்பக் குணங்களாம் உடையணிந்து நம்முன் எழுந்தருளியிருக்கின்றார்.

நற்கருணை ஆராதனை வழிபாடு PDF

திவ்விய நற்கருணை இருக்கும் எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், முதலில் முழந்தாளிட்டு அல்லது தெண்டனிட்டு வணங்கி, கீழுள்ள செபத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அதே போல் உங்கள் செபங்கள் அனைத்தையும் முடித்தப் பின் அந்த இடத்தை விட்டுச் செல்லும் போதும் இந்த செபத்தை மூன்று முறை சொல்ல வேண்டும்.
பழைய மொழிபெயர்ப்பு: நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும், ஸ்துதியும், ஸ்தோத்திரமும், நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
புதிய மொழிபெயர்ப்பு: நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே, எல்லா காலமும் ஆராதனையும், புகழும், போற்றியும், மாட்சிமையும் உண்டாக கடவது.
நிகரில்லாத விண்ணக அன்பின் மிகுதியினாலே இந்தத் திவ்விய நற்கருணையில் எழுந்தருளி, எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்க இரக்கம் கொண்ட இயேசு கிறிஸ்துவே! என் அன்புக்குரிய மீட்பரே! நீரே என் இறைவன் என்றும், அகிலத்துக்கும் அதிபதியான கடவுளாகிய தெய்வம் என்றும் விசுவசித்து, நம்பி, இப்போது உம்மை மிகுந்தத் தாழ்ச்சி வணக்கத்துடனே ஆராதிக்கிறேன்.
திவ்விய நற்கருணையில் இருக்கும் உமக்குப் பாவிகள் செய்கிற துரோகங்களைத் நீர் பாராட்டாமல், எங்கள் மேல் கொண்டிருக்கும் மட்டில்லாத அன்பைக் குறித்து, முழு மனதோடு உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் நன்றிகெட்டத்தனத்தால் மிகுந்த வேதனைப்பட்ட மகிமையுள்ள விண்ணகத் திரு மகனே! ஆராதனைக்குரிய இந்த அருட்சாதனத்தில் இருக்கிற உமக்குச் செய்யப்பட்டதும், இனி செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும், அவமானங்களுக்கும், நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இதயத்திலுள்ள முழு அன்போடும், உமக்கு ஆராதனை செலுத்துகிறேன்.
ஓ என் திவ்வியக் இயேசுவே! முன்னால் நானே பல முறை உமது சந்நிதியில் வணக்கக் குறைச்சலாய் நடந்ததற்கும், இறை பக்தியும் அன்பும் இல்லாமல் அசட்டையாய் உம்மை உட்கொண்டதற்கும், நான் படுகிற மிகுதியான வியாகுலத்தையும் உமக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்?
இரக்கம் மிகுந்த இறைவா! எங்களுடையப் பாவத் துரோகங்களைப் பொறுத்து, உமது அளவில்லாத அருளை மட்டும் எங்களுக்கு அளித்தருளும். உமது மட்டற்ற அன்பு விளங்கும் இந்த அருட்சாதனத்தில் உம்மை வணங்கவும், எல்லாருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும், எனக்குள்ளப் பெரும் ஆசையை ஏற்றுக் கொள்ளும் ஆண்டவரே. உண்மையாகவே வானதூதர்களும் புனிதர்களும் உம்மை அன்பு செய்து, போற்றிப் புகழ்ந்து, ஆராதிப்பது போல, நானும் என் முழு மனதோடு உம்மை அன்பு செய்து, போற்றிப் புகழ்ந்து, ஆராதிக்க ஆசைப்படுகிறேன்.
மேலும், நான் தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்கும் உமது விலை மதிப்பில்லாதத் திரு உடலையும், திரு இரத்தத்தையும் பற்றி, நான் இனி திவ்விய நற்கருணையில் உம்மைப் பயபக்தி வணக்கத்துடனே ஆராதிப்பதாலும், அதைத் தகுந்தத் தயாரிப்போடு வாங்கிக் கொள்வதாலும், உமது அருளை அடைந்து, என் இறப்புக்குப் பின் எல்லா விண்ணவர்களோடும் பேரின்பப் பாக்கியத்தில் உம்மை என்றென்றும் தரிசித்துப் போற்றிப் புகழத் தகுதியுள்ளவனாகும்படி எனக்கு அருள் புரிந்தருளும். ஆமென்.
எல்லாம் வல்ல இறைவா! உமது திரு மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து, நாங்கள் செய்தப் பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்குச் செலுத்துகிறத் தியாகத் திருப்பலியை உமது ஆலயத்திலிருந்தும், விண்ணகத்தில் வீற்றிருக்கிற உமது உன்னதத்திருந்தும் பார்த்து, எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும். எங்களுக்காக உயிர் நீத்த எங்கள் மீட்பரும், மனித அவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் சத்தம், சிலுவையிலிருந்து உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றது. ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். ஆண்டவரே, உமது கோபத்தைத் தணித்தருளும். எங்கள் மேல் உமது அருளைப் பொழிந்து நன்மை செய்தருளும். என் ஆண்டவரே! அதிகத் தாமதம் செய்யாதேயும். எங்கள் ஊரின் மேலும், எங்கள் மக்கள் அனைவர் மேலும் நீர் இரக்கம் கொள்ளும்படியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய… (மூன்று தடவை சொல்லவும்)
Here you can download the நற்கருணை ஆராதனை வழிபாடு PDF by click on the link given below.

நற்கருணை ஆராதனை வழிபாடு pdf

நற்கருணை ஆராதனை வழிபாடு PDF Download Link

REPORT THISIf the download link of நற்கருணை ஆராதனை வழிபாடு PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If நற்கருணை ஆராதனை வழிபாடு is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published.