திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF in Tamil

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் Tamil PDF Download

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் in Tamil for free using the download button.

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் Tamil PDF Summary

Dear readers, here we are offering திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF / Thirupalliyezhuchi Songs PDF in Tamil to all of you. ‘Sree Venkatesa Subrapadam’, played early in the morning in the temple in Tirupati, is famous all over India. This Suprapadam, composed in Sanskrit, was composed in the fifteenth century AD by Prativadhipayangaram Anangacharya of Kanchipuram, the Manavala monks, and is still recited today.

In all Vaishnava temples including Tirupati only in Margazhi, Tirupallyyezhuchi is sung on Aranganathan composed in Tamil by Thondaradippodiajvar. Apart from these, ‘Ayyappa Subrapadam’ is played early in the morning at Sabarimala, Vigneshwara Subrapadam.

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF / Thirupalliyezhuchi Songs in Tamil PDF

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 01

போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 02

அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 03

கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 04

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 05

“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 06

பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 07

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 08

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 09

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 10

“புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

To திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF, you can click on the following download button.

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் pdf

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF Download Link

REPORT THISIf the download link of திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published.