Kanakadhara Stotram Tamil PDF Summary
Dear friends, today in this post we are going to upload the கனகதாரா ஸ்தோத்திரம் PDF / Kanakadhara Stotram PDF in Tamil language to help devotees. People who recite this stotra daily in the morning or evening will be benefited from Mata Lakshmi. This is a powerful stotra that gives you strength and happiness. This is a hymn composed in Sanskrit by Adi Sankara. Below we have given the download link for Kanakadhara Stotram Tamil PDF.
The Kanakadhara hymn is the Lakshmi hymn uttered by Shankara. Poverty will not be reached if those who seek Lakmi Katakshan recite Kanakadhara Stotram every day.
கனகதாரா ஸ்தோத்திரம் PDF | Kanakadhara Stotram PDF in Tamil
கனகதாரா ஸ்தோத்ரம்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||
மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு – அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது – எனக்கு மங்களம் தருவதாகுக
2. முக்தா முஹூர்:விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||
மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.
3. விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்
ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|
ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||
எல்லா தேவர்களுக்கும் தலைமையான – இந்த பதவியை – கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!
4. ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||
ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்
பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||
சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து – (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.
5. பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||
மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்.
6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|
மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:
பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||
கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.
7. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|
மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா:||
பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவினிடத்தில் இடம் பெற்றான்.
8. தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||
ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை சாதகக்குஞ்சின் மேல் பொழியட்டும்.
9. இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர –
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே|
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்
புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||
சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை – என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.
10. கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|
சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||
மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.
11. ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨த்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||
நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்றறியப்படுபவளுக்கும், இணிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
12. நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை||
தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.
13. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி
ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா
த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே||
ஹே!தாமரைபோல் கண்களை உடையவளே!செல்வம் கொழிப்பனவும், கரணங்களனைத்தையும் மகிழ்விப்பனவும் சக்ரவர்த்தி பதவியை நல்குவனவும், பாபங்களைப் போக்குபவனவுமான உன்னை வணங்கல்கள் என்னையே சாரட்டும்.
14. யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:|
ஸந்தநோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே||
எந்த அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்குமோ, அந்தவிஷ்ணு பத்னியை முக்கரணங்களாலும் சேவிக்கிறேன்.
15. ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்யசோபே|
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||
தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே!மிக வெண்மையான துகில், சந்தனம் மாலை இவற்றால் அழகியவளே!இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே!மூவலகிற்கும் ஐச்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!
16. திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்|
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்||
திக்கஜங்கள், தங்கக்குடங்களின் வழியே பெருகச்செய்த ஆகாசகங்கை நீரால் நனைந்த உடலையுடையவளும், உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், உலக நாயகரான விஷ்ணு ப்ரியையானவளும், பாற்கடல் பெண்ணுமாகிய லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்.
17. கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூரதரங்கிதை ரபாங்கை:|
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:||
மஹாலக்ஷ்மி!மஹாவிஷ்ணுவின் பிரியே!நீ கருணை ததும்பும் கடாக்ஷங்களால், மிக ஏழையானவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டிய முதல் நபரான என் மேல் பார்த்தருள்வாயாக !
18. ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்!
குணாதிகா குருதர பாக்ய பாஜினோ (பாஜனா
பவந்தி தே புவி புதபாவிதாசாய:||
மூன்று வேதங்களே உருவான த்ரிலோகமாதாவும் லக்ஷ்மிதேவியை இந்தஸ் ஸ்தோரங்களால் தினந்தோறும் ஸ்தோத்ரம் செய்பவர் குணம் மிக்கவராயும், மிகப்பெரிய பேறு பெற்றவராயும், அறிஞர் போற்றும் கருத்து கொண்டவராயும் ஆவர்.
கனகதாரா ஸ்தோத்திரம் முற்றிற்று
Kanakadhara Stotram Benefits in Tamil
ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று “பிட்சா பவந்தேஹி” என்று கூறியபடி பிச்சையெடுத்தார் சங்கரன்.
பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள் புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது. அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.
சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில் அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.
சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் கண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார். அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.
செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார். இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.
நெல்லி வற்றலைப் பிச்சையிட்ட அந்தப் பெண்மணியிடம் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார். “இந்தப் பாடலை பாடி திருமகளுக்கு ஆரத்தி செய். உன் வறுமை எல்லாம் தீரும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அந்தப் பெண்மணி தன் கணவன் வந்ததும் நடந்தவற்றைக் கூறினாள். அவளும் அவள் கணவனும் சேர்ந்து சங்கரன் கற்றுத் தந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி திருமகளை வழிபட்டனர். வறுமை குடியிருந்த அவர்களின் வீட்டில் தங்க மழை பொழிந்தது. அவர்கள் வறுமை தீர்ந்தது.
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் பாடலின் தமிழ் விளக்கம் இதுதான்.
மொட்டுக்கள் விரிந்து மலர்ந்து அழகு செய்கின்ற தமால மரத்தை தேனை உண்டு வாழும் வண்டுகள் மொய்த்திருப்பதைப் போல திருமாலின் அழகுப் பொன்மேனியைச் சேர்ந்திருப்பவளே, எல்லா வகைச் செல்வங்களுக்கும் நாயகியான மங்களத்தைத் தரும் மகாலட்சுமியாகிய உன் கடைக்கண் பார்வை எளியவனான என் மேல் மங்களத்தை அளிக்கட்டுமாக.
பொன்னால் செய்யப்பட்ட குடங்களில் நிரப்பப்பட்ட தூய்மையான தேவ கங்கை நீரால் அட்டதிக்குகளைக் காக்கும் யானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனால் நனைந்த அழகு மேனியை உடையவளே. உலகிற்கு எல்லாம் அன்னையே. உலகத்தின் ஆசாபாசங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் நாயகனான திருமாலின் மனைவியுமானவளே. திருப்பாற்கடலின் புதல்வியே. மகாலட்சுமியே. உன்னை வணங்குகிறேன்.
கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களைப் பாடித் துதிப்பவர்கள் அனைவரும் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும் எல்லாப் பேறுகளும் பெற்ற வர்களாகவும் சான்றோர்கள் கொண்டாடும் வகையில் சிறந்து விளங்குவார்கள் என்று சங்கரர் கூறியுள்ளார்.
சுயநலமின்றி பிறர் நலத்தைக் காக்கும் பொருட்டு பிறரின் வறுமையை ஒழிக்கும் பொருட்டு செல்வம் வேண்டும் யாவரும் இந்தப் பாடல்களைப் பாடி செல்வம் வேண்டினால் நிச்சயம் அவர்களுக்கு செல்வம் வந்து சேரும்.
Here you can download the Kanakadhara Stotram PDF in Tamil by click on the link given below.