Kamarajar History PDF in Tamil

Kamarajar History Tamil PDF Download

Kamarajar History in Tamil PDF download link is given at the bottom of this article. You can direct download PDF of Kamarajar History in Tamil for free using the download button.

Kamarajar History Tamil PDF Summary

Hello readers, if you are looking for the Kamarajar History PDF in Tamil language but you didn’t find any download link anywhere so don’t worry you are on the right website. In this article, you can read the complete life history of Kamarajar in detail. He is the president of INC part and refused to become the next prime minister himself. In this post, you can download the Kamarajar History in Tamil PDF by using the link below.

அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி என்ற ஊரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தார். தற்போது அந்த ஊர் விருதுநகர் என்ற நகரமாகத் விளங்குகிறது. இவரது தந்தையின் பெயர் குமாரசாமி நாடார் மற்றும் இவரது தாயாரின் பெயர் சிவகாமி அம்மையார் ஆகும். காமராஜரின் சிறு வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் காமராஜர் தனது தாய்மாமா கருப்பையா நாடாரின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார்.

Kamarajar History PDF in Tamil

இளமையும், விடுதலைப் போராட்ட ஈடுபாடும் :

காமராஜர் குடும்ப சூழல் காரணமாக தனது ஆறாம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மாமா கருப்பையா நாடார் நடத்திவந்த துணிக்கடையில் பணி செய்து வந்தார். துணிக்கடையில் வேலை பார்க்கும் போதே செய்தித்தாள்களை படிக்கும் பழக்கம் காமராஜருக்கு ஏற்பட்டது. இதனால் விடுதலை போராட்டத்திலும், அரசியலிலும் காமராஜருக்கு இளம்வயதிலேயே ஈடுபாடு அதிகரித்தது. அருகில் நடக்கும் அனைத்து விடுதலை இயக்க கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று விடுவார். பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார், சத்தியமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகள் அவரை மேலும் விடுதலைப் போராட்டத்தின் மீது ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் காமராஜர்.

Kamarajar History in Tamil PDF

திருவனந்தபுரம் சென்ற காமராஜர் : 

ஆனால் காமராஜர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் அவரது இன்னொரு தாய்மாமா வைத்திருந்த காய்கறி கடையில் பணிபுரிந்தார் காமராஜர். அங்கேயும் அவரது விடுதலை போராட்ட ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்ளவில்லை. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு காந்தியடிகள் வருகை தந்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த போராட்டத்தில் காமராஜரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் துறவி :

விருதுநகரில் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்ததை அறிந்த காமராஜர் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியும், காமராஜர் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார். இந்திய நாடு விடுதலை பெறும் வரையில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதனை அவர்களிடம் தெரிவித்து முழுநேரமாக தேச விடுதலை போராட்டத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார். நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகும் கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kamarajar History in Tamil PDF

விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு :

சென்னை மவுண்ட் ரோடில் இருந்த வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த ஒரு கிளர்ச்சி நடந்தது. காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு சென்னை வந்து காந்தியடிகளை சந்தித்தார். காங்கிரஸ் மாநாட்டில் அந்த சிலையை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .பின்னர் நீல் சிலை அகற்றப்பட்டது.

1930ஆம் ஆண்டு நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் காமராஜர் பங்கு வகித்தார். இதனால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் காமராஜர். பின்னர் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு மீண்டும் காமராஜர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Here you can download the Kamarajar History PDF in Tamil by clicking on the link below.

Kamarajar History pdf

Kamarajar History PDF Download Link

REPORT THISIf the download link of Kamarajar History PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If Kamarajar History is a copyright material Report This. We will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *