11th Tamil Book Back Answers PDF Summary
Dear readers, here we are offering the 11th Tamil Book Back Answers PDF to all of you. 11th Tamil book back questions with answers pdf will definitely prove very beneficial for those who are in 11th class and pursuing their education in Tamil.
TAs you know the exams are about to be held and every student is busy in their preparation for the final examinations so that they can score good marks and established themselves as a smart student. So what are you waiting for just download this book and be prepared?
11th Tamil Book Back Answers PDF
Question 1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answer: எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.
Question 2. இந்திரனின் பிற நூல்கள் யாவை ?
Answer:
இந்திரனின் பிற நூல்கள் : முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தம் அழகியல், நவீன ஓவியம்.
Question 3.வால்ட்விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதைநூல் எது?
Answer:
‘புல்லின் இதழ்கள், வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதை நூல்.
Question 4. ‘நான்’ உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:
*உலகம்’ என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டபிற்கு உலகத்திலிருந்து நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.
Question 5. சொற்கள் எதற்கு உதவும் ?
Answer:
உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.
Question 6. புதுக்கவிதை என்பது எது?
Answer:
மரபு சார்ந்த செய்யுள்களின் இலக்கணக் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையே, புதுக்கவிதையாகும்.
Question 7. குறியீட்டுக்கவிதை என்பது எது?
Answer:
குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
Question 8. புதுக்கவிதையின் இருப்பு யாது?
Asnwer:
- புதுக்கவிதை, தன்னைப் படிப்பவரின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப, விரிவடையும் பன்முகத் தன்மையும் கொண்டிருக்கும்.
Question 9. பேச்சுமொழி எழுத்துமொழிக் கவிதை குறித்து இந்திரன் கூறுவது யாது?
Answer:
- “பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள், உடம்பின் மேல்தோல் போல் இயங்குகின்றன.
- எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் மூடிப் போர்த்தி விடுகின்றன’ என, இந்திரன் கூறுகிறார்.
Question 10. எது கவிஞனின் கடமையாகிறது?
Answer:
கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், கவிதைக்கான உலகத்தைத் தட்டி எழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் குணாம்சங்களையும், பேச்சு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.
Question 11. ‘வால்ட்விட்மன்’ குறித்து எழுதுக.
Answer:
- ‘வால்ட்விட்மன்’, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; ஆங்கிலக் கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; ‘புதுக்கவிதை’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
- இவர் படைத்த ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of Grass) உலகப் புகழ்பெற்ற நூல்.
Question 12. ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:
- கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
- ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்; பிரெஞ்சுக் கவிஞர். இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
Question 13. ‘பாப்லோ நெரூடா’ குறித்து நீ அறிவன யாவை?
Answer:
கவிஞர் பாப்லோ நெரூடா’, தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர். தம் கவிதைகளுக்காக, 1971ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
You may also like:
11th English Guide
11th English Question Paper 2022
11th Chemistry Public Question Paper 2022
11th Tamil Public Question Paper 2022
11th English Public Question Paper 2020
11th Maths Question Paper 2022
11th Class Hindi Question Paper 2022
You can download the 11th Tamil Book Back Answers PDF by clicking on the following download button.
This is a great post. I have been looking for this information for a long time.